மண் கடத்தலில் டான் ஆக துடிக்கும் மகேந்திரன் 20 ஆண்டுகளாக மண் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்த மாரிமுத்துக்கு பலியாடாக போகிறாரா?
மண் கடத்தலில் டான் ஆக துடிக்கும் மகேந்திரன் 20 ஆண்டுகளாக மண் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்த மாரிமுத்துக்கு பலியாடாக போகிறாரா?
மண் கடத்தலில் டான் ஆக துடிக்கும் மகேந்திரன்
20 ஆண்டுகளாக மண் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்த மாரிமுத்துக்கு பலியாடாக போகிறாரா?
ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் கிராவல் மண் கொள்ளை
கோபி சுற்று பகுதி வேளாண்மை நிறைந்த பகுதியாகும் , இந்த பகுதியில் பல இடங்களில் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் குடும்பத்தினரை பயன்படுத்தி பல கோடி மதிப்பிலான கனிமங்கள் கடத்தி பல கோடி சம்பாதித்த நபர் தான் மண் கடத்தல் மன்னன் மாரிமுத்து ஆவார் .
ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் ஊராட்சியில் அனுமதி இன்றி மண் கடத்துவதாக தகவல் வந்தது . இது குறித்து விசாரித்த பொழுது விவசாயம் செய்ய முடியாத அப்பாவி விவசாயிகள் நிலத்தை இனம் கண்டு சில ஆயிரம் மாதம் வருமானம் கிடைக்கும் என்று கூறி ஒப்பந்தம் செய்து. அவர்கள் இடத்தில் இரவு பகல் என 24 மணி நேரமும் மண் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டு அப்பாவி விவசாயிகளுக்கு சொற்ப பணம் கொடுத்துவிட்டு, கோடிக்கணக்கில் சம்பாதித்த கடத்தல் மன்னன் மாரிமுத்து வேலை ஆகும் . தற்போது ஈரோடு பகுதிகளிவ் தனக்கு உடந்தையாக இருக்கும் நபர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு அவர்களின் நிலம் மற்றும் உறவினர்களின் விவசாய நிலத்தில் மண் கடத்துவது மண் கடத்தல் மன்னன் மாரிமுத்து வேலை ஆகும். இதற்காக புதிதாக கூட்டு சேர்ந்த நபர் தான் மகேந்திரன் ஆவார். இந்த மகேந்திரன் சாதாரண ஊராட்சி கவுன்சிலர் என்று கூட உணராமல் , தான் இந்தப் பகுதி மக்கள் பிரதிநிதி என்றும் ,அதிமுகவில் முக்கியமான நபர் என்று நினைத்துக் கொண்டு தான் இருக்கும் அதிமுக கட்சிக்கு விரோதமாக ,ஆளும் திமுக கட்சியின் உடந்தையாக சட்ட விரோத மண் கடத்தலுக்கு கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வருகிறார். வெள்ளாங்கோவில் 40 ஆண்டுகளாக அதிமுக கோட்டை ஆகும் . இங்கு மாற்றுக் கட்சிக்கு எந்த வேலையும் இல்லை. அந்த ஒரே காரணத்தை பயன்படுத்தி டான் ஆக துடிக்கும் மகேந்திரன் மண் கடத்தல் தொழிலுக்கு உடந்தையாக கடத்தல் மன்னன் மாரிமுத்துக்கு அப்பாவி விவசாயிகளிடம் விவசாயத்தை தாங்கள் காப்பதும் போல் விவசாயம் செய்வதற்கு என்று விவசாயம் செய்வதற்கான மண்ணை ஓரமாக வைத்துவிட்டு, அடியில் இருக்கும் மண்ணை மட்டும் எடுப்பதாக கூறி பல ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறார் . அப்பாவி விவசாயிகள் இடத்தை சுமார் 10 அடி வரை தோண்டி முடிந்தளவு மண் கடத்தி விடுவார்கள். ஆனால் நாங்கள் நேரடியாக எடுத்த கள ஆய்வில் எடுக்கப்பட்ட வீடியோவில் மின்கம்பம் செல்லும் இரண்டு பகுதியிலும் சுமார் மூன்று அடிக்கு மேல் பள்ளம் தொண்டப்பட்டுள்ளது. அப்படி என்றால் எவ்வளவு அடி ஆழம் தோண்டி மண் கடத்தி இருப்பார்கள் . மண் கடத்தல் மன்னன் மாரிமுத்து இதுவரை கடத்திய மண்னாள் அப்பகுதியே பாலைவனமாகும் உள்ளது . கோபி , சத்தியமங்கலம் , நம்பியூர் அந்தியூர் உட்பட பல சுற்றுப்பகுதிகள் வேளாண்மை நிலத்தில் மண் கடத்தல் மன்னன் மாரிமுத்து மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. அனைத்து வழக்கையும் தீர விசாரித்து குண்டாஸில் கைது செய்து இதுவரை கடத்திய மண்ணுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இதுவரை மண் கடத்தி சட்ட விரோதமாக சம்பாதித்த இவருடைய சொத்தை அரசு தடை செய்தால் மட்டுமே அடுத்து மண் கடத்தும் நபர்கள் சிறிது பயப்படுவார்கள். இல்லை என்றால் தமிழகம் முழுவதும் மண் கடத்தும் கும்பல் தடையின்றி மண் கடத்திக தமிழக பகுதியில் உள்ள மண்வளத்தை கேரளா கர்நாடகா ஆந்திரா பகுதிக்கு தாரை வார்த்து விடுவார்கள்.