மயிலை ரசிக ரஞ்சனி சபாவில் செல்வி.நேயா செந்தில்குமார் பரதநாட்டிய அரங்கேற்றம்!

சென்னை மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் செந்தில்குமாரின் மகளும் ஆச்சாரியா ஸ்ரீமதி பாக்கியஸ்ரீ சதீஷின் சீடருமான குமாரி நேயா செந்தில் குமாரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலதிபர் நல்லி குப்புசாமி முன்னிலையில் பெருந்திரளான அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் நடைபெற்ற இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் அலரிப் பூ, சரஸ்வதி கவித்துவம், ஜெகதீஸ்வரம், தில்லை சபதம், யாதுமாகி நின்றாய் காளி, வர்ணம் - இன்னும் என் மனம், கீர்த்தனம் - என்னை நீ மறவாதே! தில்லானா குறத்தி மற்றும் மங்களம் ஆகிய தலைப்புகளில் காண்போரை பரவசப்படுத்தி இந்த நடன நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.