இந்தியன் ஆயில் நிறுவன ஓய்வு பெற்றோர் சந்திப்பு-2024!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்கள் தம் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் சந்தித்து பழைய நினைவுகளை அசைப்பட்டனர். நிகழ்ச்சியில் அறுசுவை உணவு மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.