முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை!!!

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் இரவு 7.40 மணியளவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன்,திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர். வி.சாந்தலிங்ககுமார்,அறங்காவலர்,மஞ்சுளா,பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார்,துணைத் தலைவர் ஜாபர்அலி ஆகியோர் கோவில் வளாகத்தை சுற்றி தங்கத்தேர் இழுத்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி இயக்குநர் கைலாசமூர்த்தி மற்றும் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.