அல்பய்யினா சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்டி! மனிதம் போற்றுவோம்!! சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான விருது!!

வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் எனும் தேசிய அமைப்பின் சார்பாக மனிதம் போற்றுவோம் விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் அல்பய்யினா சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்டி இணைந்து கோவை மாவட்டத்தின் மனிதநேய பணியாளர்களை பாராட்டும் விதமாகவும் ஊக்குவிக்கும் விதமாகவும் போத்தனூர் வசந்தம் மஹாலில் மனிதம் போற்றுவோம் 2024 நிகழ்ச்சியில் சிறந்த சமூக செயற்பாட்டாளருக்கான விருது வழங்கினர். இந்நிகழ்ச்சிக்கு வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில தலைவர் செய்யத் முஹம்மத் புகாரி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சிற்றிடை உணவு கொடுத்த பின் சமூக செயற்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி தங்களது பணிகளை குறித்து பேசுவதற்கான நேரங்களையும் உருவாக்கிக் கொடுத்தது. மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது முதல் 45 வயது வரை இருப்பவர்களை மீட்டு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் அளித்த லிட்டில் ஹாட்ஸ், இரத்த தானம் மற்றும் கல்விக் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கும் தோழமை அறக்கட்டளை, 30 பேர் கொண்ட நண்பர்கள் அனாதை விடுதிகள், முதியோர் இல்லங்களுக்கு உணவளிக்கும் மற்றும் மருத்துவ உதவி, கல்வி உதவி செய்யும் ரிதம் குரூப்ஸ், கோவை மாவட்டம் ஹோட்டல்களிலும் திருமண நிகழ்ச்சியில் மீதமாகும் உணவுகளை தேவைப்படுபவர்களுக்கு சேர்பதும் பாதுகாப்பு விழிப்புணர்வு செய்யும் Feedingo Foundation, கோவையில் HIV எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகள் பெற்றோர்களுக்கு மருத்துவ சிகிச்சை, உணவு, உடை அளிக்கும் அசிசி சினேகாலயா சாரிட்டபிள் டிரஸ்ட், கணவனை இழந்த விதவை குடும்பங்களுக்கு மாதாந்திர உதவிகள், ஏழை மாணவர்களுக்கு டியூஷன் மூலம் இலவச கல்வி பயிற்சி செய்யும் உதவும் உள்ளங்கள் பொதுநல அறக்கட்டளை, சுயத்தொழில் உதவி, மருத்துவ உதவி, மாதாந்திர மளிகை கிட்டுகள் வழங்கும் அல் இஹ்ஸான் அறக்கட்டளை, முஸ்லிம் சமூகத்தில் மரணித்த நபர்களுக்கு குளிப்பாட்டி கஃபனிடம் சேவையை இலவசமாக செய்து வரும் சகோதரர் இப்ராஹிம், 35 வருடமாக மருத்துவ துறையில் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளை செய்யும் ஒரு ரூபாயில் ஓர் உயிர் அமைப்பு, பசித்தோருக்கு உணவளித்தல், அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் சேவைகள், ஆதரவற்ற விடுதிகளில் மரணிக்கும் நபர்களுக்கு இறுதி சடங்கை இலவசமாக செய்யும் தென்றல் பொதுநல அறக்கட்டளை மேலும் பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அல்பய்யினா சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்டின் பொறுப்பாளர் ரிஸ்வான் தொகுத்து வழங்கினார். விருது வாங்கிய நபர்கள் அல்பய்யினா சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் க்கு தொடர்ந்து சேவையாற்றுவதற்காகவும் ஊக்குவித்ததுக்காகவும் நன்றிகள் தெரிவித்தனர். மேலும் பல்வேறு சமூக சேவகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.