திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியில் லாரியில் மோதிய பி.எம்.டபிள்யூ கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலத்த காயம்
திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பகுதியில் லாரியில் மோதிய பி.எம்.டபிள்யூ கார் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலத்த காயம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமம் அருகே சென்னைக்கு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்த பி.எம்.டபிள்யு காரை விக்னேஷ் என்பவர் ஓட்டியுள்ளார் காரில் விக்னேஷின் தயார் பாமா (58) ,மனைவி சத்ருதா (28) ஆகியோர் பயணம் செய்தனர் இந்நிலையில் ஓங்கூர் அருகே வரும் போது காரை மற்றொரு கார் உரசியவாறு சென்றதால் விக்னேஷ் திண்டிவனம் சென்னை மார்க்கத்தில் காரை வலைத்துள்ளார். அப்போது கார் சென்டர் மீடியனில் ஏறி எதிர்த்திசையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த செஞ்சி தச்சம்பட்டு பகுதியை சேர்ந்த தேவகுமார் (29) என்பவர் ஓட்டிவந்த டிப்பர் லாரி மீது பலமாக மோதியது காரில் ஏர் பலூன் விரிவடைந்தாலும் சீட் பெல்ட் அணிந்ததாலும் காரில் பயணம் செய்த மூன்று பேரும் உயிருக்கு ஆபத்தின்றி பலத்த காயமடைந்தனர். விபத்தில் விக்னேஷிற்கு இடது கால் முறிவு,உதட்டில் காயமும், பாமாவிற்கு இடுப்பு எலும்பு முறிவும்,விக்னேஷின் மனைவி சத்ருதாவிற்கு இடது கை.மற்றும் இடது கால் முறிவு ஏற்பட்டது. இவர்களுக்கு பின்னால் வந்த சங்கராபுரத்தை சேர்ந்த மனோ, வயது 35 பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் பணி செய்து வரும் இவர் பணி நிமித்தமாக சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி சென்று கொண்டிருக்கும் போதும் பாண்டிச்சேரி பிருந்தாவனை சேர்ந்த செந்தில் வயது 45 சென்னையில் ஜெனரேட்டர் டீலராக பணி செய்யும் இவரும் ஆக இரண்டு கார்களை சேர்ந்தவர்கள் மூவரையும் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி செய்தனர். இந்நிலையில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அவர்களுக்கு அரசு தலைமை மருத்துவர் ரவிச்சந்திரன், மோனிஷா, மற்றும் செவிலியர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர் மூவரையும் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து மருத்துவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மூவரும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்தால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது