சென்னை புதுப்பேட்டையில் கோமளாம்பிகை சமேத கோமளீஸ்வரர் கும்பாபிஷேக விழா!

சென்னை புதுப்பேட்டையில் உள்ள கோமளாம்பிகை சமேத ஸ்ரீ கோமளீஸ்வரர் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திருக்கோவில் பொறுப்பாளர் பார்த்தசாரதி உள்ளிட்ட திருப்பணிக் குழுவினர் மற்றும் தமிழ்நாடு அரசு அறங்காவலர் அலுவலக செயல் அலுவலர் ஜெயந்தி உள்ளிட்டோர் சிறப்பான முறையில் விழாவிற்கான ஏற்படுகளை செய்திருந்தனர். கோவிலில் சிறப்பான அன்னதானம் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கடவுளின் அருள் வேண்டினர்.