மின்வாரியத்தில் 60ஆயிரம் காலி பணியிடங்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

தமிழ்நாடு மின்சார வாரியம் எம்ப்ளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் தேனியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மின்சாரத்துறையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும், மின்வாரியத்தில் தேர்வு செய்து பணி நியமனம் வழங்கப்படாத ஐந்தாயிரம் கேங்மன்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதி அளித்தபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும் மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் மேலும் மின்வாரிய ஊழியர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேட்டி - மணிகண்டன் ( மாநில தலைவர் ) தமிழ்நாடு மின்சார வாரியம் எம்பிளாயிஸ் ஃபெடரேஷன்.