திருப்பூரில் அதிகாரிகள் கண்காணிப்பை மீறி கள்ளத்தனமாக தடை செய்யப்பட்டுள்ள குட்கா போதை பொருட்கள் அமோக விற்பனை

திருப்பூர் பிஎன் ரோடு போயம்பாளையம் கங்கா நகரில் திருப்பூர் மாநகராட்சி கங்கா நகர் துவக்கப்பள்ளி அருகே வடிவேல் பேக்கரி இயங்கி வருகிறது இந்த பேக்கரியில் குட்கா போதை பொருட்கள் அமோகமா விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதே போல் கங்கா நகரில் இருந்து வெங்கமேடு போகும் சாலையில் மல்லிக் கடையில் அச்சமே இல்லாமல் போதை பொருட்கள் அமோகமாக விற்கப்படுகிறது. பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனைகள் உள்ள பகுதியில் போதை பொருட்கள் பல்வேறு இடங்களில் மட்டுமில்லாமல் டீ கடை, பேக்கரி மளிகை கடையில் விற்பனை செய்யப்பட்டு வருவது இளைய சமுதாயமான பள்ளி மாணவர்களும் குட்கா போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் தடுக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இதுகுறித்து மாநகர காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை துரிதமாக செயல்பட்டு பல்வேறு நபர்கள் மீது அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ,ஹான்ஸ்,கூல் லிப் போன்ற போதை பொருட்கள் விற்பனையாளர் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகிறார்கள். இது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. இவர்களிடம் முறைப்படி விசாரணை செய்து இவர்களுக்கு மொத்தமாக சப்ளை செய்யும் நெட்வர்க் டீமை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே திருப்பூரில் போதை பொருள் விற்பனை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்கல் மற்றும் பொதுமக்களின் கருத்து.