தேனியில்அனைத்து வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் சார்பில் 9 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது!!!
தேனியில்அனைத்து வாகன பழுது பார்ப்போர் நலச் சங்கத்தின் சார்பில் 9 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது!!!
பழனிசெட்டிப்பட்டியில் அனைத்து வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக 9ஆம் ஆண்டு ஆண்டு விழா நடைபெற்றது இந்த விழாவானது சங்கத்தின் தலைவர் சலீம் ராஜா தலைமையிலும் செயலாளர் கார்மேகம் பொருளாளர் இளங்கோவன் ஆகிய முன்னிலையில் நடைபெற்றது .மேலும் அனைத்து வாகன பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக முதலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது நிர்வாகிகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது .மேலும் இந்த நிகழ்வில் சட்ட ஆலோசகர் ராதாகிருஷ்ணன் கவுரவ தலைவர் ரத்தினம், துணைச் செயலாளர் முத்து மணி ,துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் நிர்வாகிகள் பங்கேற்றனர்.