தேனி அருகே பெண்ணை அரிவாளால் தாக்க முயன்ற நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

தேனி அருகே பெண்ணை அரிவாளால் தாக்க முயன்ற நபர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தேனி அருகே கோபாலபுரம் பகுதியில் வைகை அணை தெருவில் வசித்து வருபவர் சண்முகவள்ளி (45) இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான இல்லத்தில் வசித்து வருகிறார் இந்நிலையில் அதே பகுதியில் தேனியை சேர்ந்த காசிராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று இருக்கின்றது சண்முகவள்ளி வீட்டினை தாண்டி தனது தோட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இருதரப்பிற்கும் இடையே பாதை பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது இந்நிலையில் தனது வீட்டின் முன்பு உள்ள தனது இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டி அதற்கு பூஜை செய்வதற்காக ஏற்பாடுகளை சண்முகவள்ளி மற்றும் அவரது மகள் மேற்கொண்டனர் அப்போது அங்கு வந்த காசிராஜன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர்களை தாக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் காசிராஜன் மகன் மற்றும் மணிக்குமார் என்பவர் சண்முகவள்ளியை தாக்கி தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது பின்னர் அருகில் இருந்தவர்கள் இருதரப்பினரிடையே சமாதானம் ஏற்படுத்தி அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றனர் இந்தத் தாக்குதல் சம்பவத்தை சண்முகவல்லியின் மகள் தனது செல்போனில் வீடியோ எடுத்து நிலையில் இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சண்முகவள்ளி தன்னை தாக்கியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார் இதுகுறித்து விசாரணை செய்து வரும் பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் பெண் மீது அரிவாள் காட்டி தாக்குதல் நடத்திய காசிராஜன், மணிக்குமார் மற்றும் காசிராஜனின் மகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் பாதை பிரச்சனை காரணமாக பெண்ணை அரிவாளால் தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது