தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தின் அருகில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவரது 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் தேமுதிக கொடியை மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்டச் செயலாளர் சிவக்குமார் ஏற்றி வைத்தார். மாவட்டத் செயலாளர் பத்மநாபன் விஜயகாந்தின் உருவ படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்கள் தூவி வணங்கிய பின் சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். விழாவில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ரவி அவைத்தலைவர் பரமசிவம் கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் ரமேஷ் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பாலு ஏ கனகேந்திரன் கீழ் கோத்தகிரி ஒன்றிய அவைத்தலைவர் சிவாஜி கேப்டன் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மகேஸ்வரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், சின்னசாமி வலைதள அணி மாவட்ட செயலாளர் லியோன் சில்வெஸ்டர், துணைத் செயலாளர் சந்தோஷ், தலைமை கழக பேச்சாளர் தமிழ்ச்செல்வன், கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள், பேரூராட்சி ஒன்றிய நிர்வாகிகள், கீழ் கோத்தகிரி ஒன்றிய நிர்வாகிகள் ராஜா பரணி, சௌந்தர்ராஜ், பாண்டியன், சசி, தேவன், பிரபு, சங்கர், கணேஷ், சுப்பிரமணி, சசி, செந்தில், பிரபாகரன், அசாம், காளிமுத்து, மகேஷ் மற்றும் மகளிர் அணி உறுப்பினர்கள் தொண்டர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மக்கள் அனைவரும் திரண்டு அன்னதானத்தை உண்டு மகிழ்ந்தனர்.