திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் மது கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய கடையை தமிழக அரசு மூடியதாக கணக்கு காட்டி 500 கடையில் இதே இடத்தில் இருந்து 1921 மதுபான கடையும் ஒன்று ஆகும். தற்பொழுது அதை இடத்தில் வேறு கடை எண்ணில் 2309 திறக்கப்பட்டுள்ளது. அதே இடத்தில் மதுபான கடை திறந்ததற்கும், அப்பகுதியில் உடனடியாக மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் செய்து வருகிறார்கள் . கடையின் பார் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுவதாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் . பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபான கடையை அப்புறப்படுத்த தமிழக அரசு ஒருபுறம் நடவடிக்கை எடுத்தால். திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் மாவட்டத்தில் விற்பனை குறைவு என்று காரணம் காட்டி மதுபான கடைகளை மீண்டும் சர்ச்சைக்கு உள்ள அதே இடத்தில் மதுபான கடை திறப்பது ஏன் ? இந்த கடை திறப்பதற்கு அமைச்சர், அதிகாரிகள் எத்தனை லட்சம் லஞ்சமாக வாங்கினார் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் . இந்த மதுபான கடை இருப்பதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது, பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அந்த பகுதி இளைய சமுதாயம் மது போதைக்கு அடிமையாகும். சூழல் உருவாகிறது எனவே உடனடியாக அந்த கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெறுமக்கள் கூறினார்கள்.