நான் முதல்வன் திட்டம் மூலம் ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்! அமைச்சர் உதயநிதி பெருமிதம்!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா அரங்கில் "நான் முதல்வன்", திட்டம் குறித்து கல்வி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்க தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். அந்த உரையில் நான் முதல்வன் திட்டம் இலட்சக்கணக்கான இளைஞர்களின் கனவை நிறைவேற்று திட்டமாக உள்ளது. இதுவரை சுமார் 31 லட்சம் இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நான் முதல்வன் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த திட்டம் மூலம் திறன்மிக்க மாணவர்களையும் அவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்ற திறமைப்பட்டவராகவும் திகழ வழி வகுக்கும். இவ்வாறு அவர் பேசினார். அடுத்து முன்னிலை வைத்து உயர் கல்வித் துறை அமைச்சர் கா பொன்முடி பேசினார். அதன் பிறகு நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கிய கல்லூரியை பாராட்டி பாராட்டு விருது வழங்கப்பட்டது. தமிழக அரசு வழங்கும் இந்த விருதினை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பொறியியல் கல்லூரி, சேலம் மாவட்டத்தில் உள்ள வீரஜிலால் காந்தி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளுக்கு விருது வழங்கப்பட்டது. விருதினை கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வழங்கினர்.