தேனி மாவட்டத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை நடத்தினார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, பெண்களுக்கு சுய தொழில் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா என முப்பெரும் விழாவினை நடத்தினார்கள். இந்த விழாவில் சங்கத்தின் அமைப்பு தலைவர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைப்பு பொதுச்செயலாளர் ரகுராம் சங்கத்தின் சார்பில் பெண்களுக்கு சுய தொழில் துவங்குவதற்கு உதவி புரியும் விதமாக தையல் இயந்திரம் மற்றும் கிரைண்டர் மிஷின்களை வழங்கினார். மேலும் தேனி மாவட்டத்தில் சிறந்த மதிப்பெண் பெற்ற 10 வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு சங்கத்தின் அமைப்பு பொருளாளர் ரவி முதலியார் நிதி உதவி மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாணவ மாணவியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.