பெருந்துறை சந்திப்பில் டாஸ்மாக் கடையால் அடிக்கடி விபத்து அப்புறப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நான்கு ரோடு சந்திப்பில் டாஸ்மார்க் கடையில் மது அருந்திவிட்டு சாலை விதிகளை பின்பற்றாமல் தன் இஷ்டத்துக்கு செல்லும் மது பிரியர்களால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்தில் ஏற்படுகிறது. அருகே பெரிய காய்கறி மார்க்கெட், பிரசித்த பெற்ற கோவில்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனை உள்ளது . மது போதையில் தன்னை மறந்து திரியும் மது பிரியர்களால் பொதுமக்கள் கடந்து செல்லவும் அச்சப்படுகிறார்கள். போக்குவரத்து விதிமுறைகள் மீறியும் சிக்னலை மதிக்காமலும் உடனே குறுக்கே செல்வதால் அடிக்கடி சர்வ சாதாரணமாக விபத்து நடைபெறுகிறது. சில நாட்களில் பள்ளி திறக்க உள்ள நிலையில் மாணவ மாணவிகள் செல்லும் பொழுது பல்வேறு இடையூறு ஏற்படும் என்றும் இந்த கடையை உடனடியாக வேற இடத்துக்கு மாற்றவும் அல்லது நிரந்தரமாக மூடவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.