ஆண்டிபட்டி அருகே வைகைஅணைக்கு முன்பாக தடுப்பனையில் குளிக்கசென்று ஆற்றில் மூழ்கிய தீயணைப்புத்துறையில் பணிபுரியும் நபரின் உடல் மீட்பு

தேனி மாவட்டம். ஆண்டிபட்டி அருகே வைகைஅணைக்கு முன்பாக தடுப்பனையில் குளிக்கசென்று ஆற்றில் மூழ்கிய தீயணைப்புத்துறையில் பணிபுரியும் நபரின் உடல் மீட்பு இரண்டாவது நாளாக தேடும் பணியில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் உடலை மீட்டனர் சென்னை தாம்பரம் பகுதியில் தீயணைப்புதுறை வீரராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நாடார் தெரு பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்காக வந்த நிலையில் நேற்று மதியம் வைகைஅணைக்கு முன்பாக உள்ள தடுப்பனையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் இதையடுத்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு அவரது உடலை தேடும் பணியில் ஆண்டிப்பட்டி, கடமலைகுண்டு, பெரியகுளம் பகுதியில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட தீயணைப்புதுறையினர் நேற்று மாலை வரை தேடியும் உடல் கிடைக்காத நிலையில் இன்று காலையிலிருந்து இரண்டாவது நாளாக தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு தற்போது உயிரிழந்த சதீஷின் உடலை மீட்டுள்ளனர் கருங்கற்களுக்கு இடையே சிக்கியிருந்த சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.