நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவி செய்கிறேன் பாலா

ஆண்டிபட்டி தாலுகா-தேனி மாவட்டம். நான் கருப்பு பணம் வைக்கவில்லை - வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவி செய்கிறேன் கஷ்டங்கள், ரொம்ப அடி, வலி ஆகியவை தான் எனக்கு பின்னால் இருக்கிறது விஜயின் அரசியல் வருகை குறித்து பேசும் அளவிற்கு நான் பெரிய ஆள் கிடையாது அரசியலுக்கு வரும் எல்லோரும் மக்களுக்கு நல்லது தான் செய்வார்கள் ஆண்டிப்பட்டியிலுள்ள பாரத் நிகேதன் தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற குக் வித் கோமாளி புகழ் பாலா விஜய் டிவியில் வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வரும் காமெடி நடிகரும் சமூக அக்கறை கொண்டவருமான பாலா ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பகுதியில் செயல்படும் பாரத் நிகேதன் தனியார் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார் நிகழ்ச்சியில் நடிகர் விக்கி சிவாவுடன் இணைந்து நடிகர் விஜய், விஜய் சேதுபதி , எஸ்.ஜே.சூர்யா , நடிகர் கார்த்திக், செந்தில் உள்ளிட்ட புகழ்பெற்ற சினிமா பிரபலங்களின் குரலில் மிமிக்ரி செய்தும், காமெடி செய்தும் பேசியதோடு , பாடல்களுக்கு நடனமாடி கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்களை கைத்தட்ட வைத்து மகிழ்ச்சிபடுத்தினார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாலா ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதி தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் இங்குள்ள மக்களின் அன்பு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்தார் சமீப காலமாக தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது உள்ளிட்ட சமூக சேவை செய்து வரும் நீங்கள் பொதுவான கருத்து சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு ? கருத்து சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை என்றும் , நம்மால் முடிந்ததை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன் என்றும் கூறினார் நடிகர்களின் அரசியல் வருகை தொடர்ந்து உள்ளது, நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இருக்கிறார் அது பற்றி கருத்து கேட்டதற்கு? தமக்கு அரசியல் பற்றி எல்லாம் தெரியாது என்றார் 3) பலருக்கும் தெரிந்த நடிகராக இருக்கும் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் மக்களுக்கு நல்லது செய்வாரா என்ற கேள்விக்கு? யாராக இருந்தாலும் அரசியலுக்கு வந்தால் நல்லது தான் செய்வார்கள் என்றும் மற்றவர்களை பற்றி சொல்வதற்கு எனக்கு தகுதி இல்லை நான் ஒரு சாதாரன மனிதன் என்றும் அவர்களெல்லாம் மிகப்பெரிய ஆள் என்றும் கூறினார் தொடர்ந்து பேசிய அவர் நம்மளால் முடிந்தது சம்பாதிப்பது மட்டுமே ஒரு சிலர் சொல்வதை போல என் பின்னால் யாருமில்லை என் பின்னால் இருப்பது கஷ்டங்கள், வெட்கம், அடி, வலி ஆகியவை மட்டும் தான் என்று இதற்கடுத்து எனக்கு தோள் கொடுப்பது நடிகர் லாரன்ஸ் அண்ணன் தான் என்றும் கூறினார் தொடர்ந்து பேசி ஒரு சிலர் கூறுவது போல கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக நான் மாற்றவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்றும் மூன்று வேளை உணவுக்கு சிரமப்பட்ட எனக்கு உணவு கிடைத்ததால் இந்த எண்ணம் தோன்றியதாகவும் தெரிவித்தார்