ஆண்டிபட்டியில் உள்ள நன்மை தருவார்கள் திருத்தல ஐயப்ப சுவாமி ஆலய 9நாள் உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 49 அடி உயரம் உள்ள சர்வ சக்தி மாகாளியம்மன் சுவாமி எழுந்தருளியுள்ள நன்மை தருவார்கள் ஐயப்ப சுவாமி ஆலய மார்கழி 9நாள் உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்று நிகழ்ச்சி கோவில் பூசாரியும் அறங்காவலருமான முத்து வன்னியம் தலைமையில் மாகாளியம்மன் கோவில் முன்புறம் கொடியேற்றத்திற்கான கொடிகம்பத்திற்கு பூஜைகள் நடத்தபட்டு தீப ஆராதனை காட்டப்பட்டு கொடிமரத்தில் கொடி கட்டப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான ஐயப்ப பக்தர்கள் ஒன்று சேர்ந்து சரண கோஷங்களை எழுப்பியபடியே கொடிகம்பத்தில் கொடியேற்றபட்டது.