குன்னத்தூர் பேரூராட்சியில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை ஜோர் மாமுல் மழையில் நிர்வாகம்!!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பேரூராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பிளாஸ்டிக் டம்ளர், கேரி பை அனைத்தும் சர்வ சாதாரணமாக விற்கப்படுகிறது.குன்னத்தூர் பஸ் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் கட்டுக்கட்டாக பிளாஸ்டிக் டம்ளர், கேரி பை வைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து டாஸ்மார்க் பார்களிலும் சர்வ சாதாரணமாக பிளாஸ்டிக் டம்ளர் கையாளப்படுகிறது. குன்னத்தூர் அனைத்து பகுதியிலும் கேரி பை இல்லாத கடையே கிடையாது. இதனை சோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சுகாதார ஆய்வாளர் பணி காலி இடமாக உள்ளதால். மேலாளர் சிவகுமார் தான் பார்த்து வருகிறார், பேரூராட்சி செயல் அலுவலர் கண்டு கொள்வதில்லை. கடைக்கு சொற்ப மாமூல் வாங்கிக்கொண்டு விற்பனைகளை கண்டு கொள்ளாமல் இருக்கும் பேரூராட்சி நிர்வாகத்தால் சுற்றுச்சூழல் மாசடைந்து வரு‌கிறது. மழை காலங்களில் நிலத்தடி நீர் செல்ல முடியாமல் தடை ஏற்பட்டு வீணாகி வருகிறது திருப்பூர் மாநகரில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குன்னத்தூரில் இருந்து இருந்து மொத்தமாக விற்பனைக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.