சேலத்தில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர் சங்கம் சார்பில் இன்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றதில் ஜெ‌ நித்யா தலைமை தாங்கினார். முன்னிலை பொறுப்பை தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் சங்கம் மாவட்ட தலைவர் முனியப்பன் , மாநில பொருளாளர் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் வகிக்க மாநில செயற்குழு உறுப்பினர் சேலம் மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மற்றும் சேலம் மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னக்கிளி நன்றியுரை தெரிவித்தார். டிபிசி பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.