நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி பல்லடம் செய்தியாளராக பணிபுரியும் நேச பிரபு மீது நேற்று இரவு கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு தமிழகம் எங்கும் பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் செங்கம் அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் சார்பில் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள DSP அலுவலகம் எதிரில் கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக கைது செய்ய கோரியும், தனக்கு ஆபத்து உள்ளதாகவும் தன்னை கொலை வெறி தாக்குதல் நடத்துவதற்கு தயாராக தன்னை நோட்டமிட்டு இருக்கின்றனர் எனவும், கொலைவெறி கும்பலில் இருந்து தன்னை காப்பாற்றும் படி காவல்துறையிடம் கெஞ்சியும் காவல்துறை மெத்தன போக்கை கடைபிடித்ததால் பத்திரிக்கையாளர் நேச பிரபு தாக்கப்பட்டது பெரும் கண்டனத்துக்கு உரியது என பல்வேறு தரப்பட்டவர்களில் இருந்து கண்டனங்கள் எழுந்த நிலையில் செங்கம் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலர் சார்பில் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதில் அனைத்து பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.