தமிழக முதல்வரின் பிறந்த நாளில் திமுக சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனு!

மாண்புமிகு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலினின் பிறந்தநாளில் சென்னை அறிவாலயத்தில் வாழ்த்து கூறுவதற்காக கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலைபோல் குவிந்தனர். அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள்,கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அண்ணா அறிவாலயமே கரைபுரண்டு ஓடியது. மறுபுறம் பாராளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனு கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் தென்காசி ரிசர்வ் பாராளுமன்ற தொகுதிக்கு கீழநத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் வே. அனுராதா மற்றும் புனிதா ஆகியோரும், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு டாக்டர் மீரா தேவியும், தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு வழக்கறிஞர் மணி மற்றும் தர்மபுரி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணனும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு கலைச்செல்வியும், தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு ராதிகா மணிமாறனும், கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளையும் கேட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜிகே நந்தினி ஹரிகரனும், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கு உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. திருநாவுக்கரசு வும், திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு புதுக்கோட்டை வடக்கு கரம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் மாலா ராஜேந்திர துரையும் விருப்பமனு கொடுத்துள்ளனர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பலரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு செய்து வருகின்றனர்.