தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாட்டு மாடு நல சங்கம் சார்பில் தேனி நகராட்சி ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் உள்ள இருசக்கர வாகன காப்பகம், நகராட்சி கழிவறை மற்றும் கடைகளில் இரண்டு மாதங்களாக ஏலம் விடாமல் தேனி நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் நஷ்டம் ஏற்படுத்தி வரும் தேனி நகராட்சி ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். நாட்டு மாடுகள் நலச்சங்க மாநில தலைவர் கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் ஆதி முன்னிலை வகித்தார். AICCTU மாநில செயலாளர் முத்து கண்டன உரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.