திருப்பூர் மாநகரில் குட்கா இல்லாத பெட்டிக்கடையே கிடையாது, ஆதாரத்துடன் செய்தி உடனடியாக சீல் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு சபாஷ் திருப்பூர் புதூர் பிரிவு பெரிச்சி பாளையம்...
திருப்பூர் மாநகரில் குட்கா இல்லாத பெட்டிக்கடையே கிடையாது, ஆதாரத்துடன் செய்தி உடனடியாக சீல் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு சபாஷ் திருப்பூர் புதூர் பிரிவு பெரிச்சி பாளையம் பேக்கரி பெட்டிக்கடையில் குட்கா விற்கும் காட்சி
திருப்பூர் மாநகரில் முழுவதும் பரவலாக குட்கா, ஹான்ஸ், கூல் லிப், ராக்கெட், போதை சாக்லேட் ,கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது குறிப்பாக டாஸ்மார்க் பார் ,பேக்கரி, பெட்டிக்கடைகள் விற்கப்பட்டு வருகிறது .ஆனால் டாஸ்மாக் பார் ,பேக்கரி அருகேயுள்ள பெட்டிக்கடைகள் அதனின் மின் இணைப்புடன் அதே உரிமையாளர் மேற்பார்வையில் பெட்டிக்கடைகள் செயற்பட்டாலும். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பெட்டி கடைக்கு மட்டும் கண் துடைப்புக்கு சீல் வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். பெட்டி கடை , டாஸ்மார்க் பார் பேக்கரி உரிமையாளர்கள் ஒன்றாக இருந்தாலும் சீல் பெட்டி கடைக்கு மட்டுமே உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டினாலும் ஆணிவேரான உரிமையாளர்களை விட்டுவிட்டு. அப்பாவி கூலி வேலை ஆட்கள் மீது பேருக்கு வழக்கு பதிவு செய்து விட்டு. மீண்டும் சிறிது நாள் கழித்து தொடர்ந்து வேறொரு அப்பாவி கூலி வேலை ஆட்கள் மூலம் மூலம் விற்பனை தொடர்ந்து நடைபெற உதவுகிறார்களா? என சந்தேகம் வருகிறது பெட்டிக்கடை பேக்கரி உரிமையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தால் மட்டுமே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் போதைப் பொருட்கள் திருப்பூர் மட்டுமின்றி தமிழ்நாட்டில் சமூகவிரோதிகள் விற்க அஞ்சுவார் என்று சமூக ஆர்வலர் கூறி வருகின்றது.
திருப்பூர் புதூர் பிரிவு பெரிச்சிபாளையம் சோமு லே-அவுட் கலர்ஸ் கம்பெனி எதிரில் உள்ள மகாலட்சுமி ஐயங்கார் பேக்கரியை சேர்ந்த பெட்டிக்கடையில் குட்கா ,கூல்லிப் மும்முரமாக விற்கும் காட்சி.