கே.கே.நகர் தெற்கு தி.மு.க இளைஞரணி பொதுக்கூட்டம்!!!

சென்னை கேகே நகர் தெற்கு திமுக இளைஞர் அணி சார்பில் இரண்டாவது மாநில மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் ஜாபர் கான் பேட்டை பிள்ளையார் கோவில் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு இளைஞர் அணி சேர்ந்த தென்னரசு தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, திமுக தலைமைக்கழக செயற்குழு உறுப்பினர் தனசேகரன், தலைமைக் கழக பேச்சாளர்கள் சுஜாதா, அரங்கநாதன், மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம், கலைஞர் நகர் தெற்குப் பகுதி செயலாளர் கண்ணன், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் உள்ளிட்ட கழக அங்கத்தினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் நிறைவாக மகளிருக்கு இலவச சேலை விநியோகம் செய்யப்பட்டது.