தேனி நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மலேரியா மஸ்தூர் பணியாளர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி!!!

தேனி நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் மலேரியா மஸ்தூர் பணியாளர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி சிவாஜி நகர், முதல் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் (56) இவர் கடந்த 32 ஆண்டுகளாக தேனி நகராட்சியில் மலேரியா மஸ்தூர் பணியாளராக பணியாற்றி வருகிறார். தேனி நகராட்சி ஆணையர் ராமகிருஷ்ணனுக்கு சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தேனி நகராட்சி ஆணையர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் இருவரிடமும் சஸ்பெண்டுக்கு உரிய விளக்கம் கேட்க சென்றார். அப்பொழுது தேனி நகராட்சி ஆணையர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் இருவரும் தகாத வார்த்தைகளில் திட்டினர். இதனால் மனக் விரக்தி அடைந்த மலேரியா மஸ்தூர் பணியாளர் ராமகிருஷ்ணன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார், உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தேனி கானா விளக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தேனி கானா விலக்கு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் மலேரியா மஸ்தூர் பணியாளருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.