ஈரோடு மாவட்டம் திங்களூரில் 24 மணி நேரமும் மது விற்பனை கோவில் பின் குடிமகனின் பொழுதுபோக்கு ஈரோடு எஸ்.பி நடவடிக்கை எடுப்பாரா?
ஈரோடு மாவட்டம் திங்களூரில் 24 மணி நேரமும் மது விற்பனை கோவில் பின் குடிமகனின் பொழுதுபோக்கு ஈரோடு எஸ்.பி நடவடிக்கை எடுப்பாரா?
ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் திங்களூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலில் பின்புறம் தமிழக அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மார்க் பாரில் 24 மணி நேரமும் மதுபானங்கள் இரு மடங்கு விலையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது . மெயின் ரோட்டில் அருகே மதுபான கடை இருப்பதால் அன்றாடம் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பொருட்கள் வாங்க செல்லும் பெண்கள் மிகவும் அவதி அடைகிறார்கள். எந்த நேரமும் சரக்கு கிடைப்பதால் சரக்கு அடித்து விட்டு கோவிலுக்கு பின்புறம் உள்ள ஆலமரத்தில் குடிமகன்கள் கூடாரமாக உள்ளது .இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிம்மதியாக கடவுளை கூட வணங்க முடியவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்ட எஸ்.பி கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்பனை செய்து வரும் பாருக்கு சீல் வைத்து அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் எனவும் அன்றாடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் நிரந்தரமாக இந்த மதுபான கடையை மூடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.