திருப்பூர் மாவட்டம் அவிநாசி பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம். பொதுமக்கள் காத்திருப்பு. மாமூல் மழையில் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறை பார்வையில் சிக்குவது எப்போது?

திருப்பூர் மாவட்டத்திலேயே அவினாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் தான் மிக அதிகமாக பத்திரப்பதிவு நடைபெறுகிறது.அவினாசி வட்டாரத்தில்12.கி.மீ சுற்றளவிற்கு இந்த ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் மட்டுமே உள்ளதால் பயனாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு நாளில் முடிய வேண்டிய வேலை முடியவில்லை என்றால் . பல நாள் அலைய வேண்டும் என்பதால் கேட்கும் லஞ்ச பணத்தை புரோக்கர் மூலம் அள்ளிக் கொடுக்கிறார்கள். அவினாசி ஒன்றியத்தில் உள்ள 31 ஊராட்சிகளில் நூற்றுகணக்கான கிராமங்கள் உள்ளது. அவினாசி ஒன்றியத்தில் வீட்டுமனை விற்பனை, பூமி விற்பனை அதிகமாக நடந்துவருகிறது. அவினாசி வளர்ந்து வரும் நகரமாக மாறிவருகிறது. எனவே இங்கு ரியல் எஸ்டேட் தொழில் வெகு ஜோராக நடக்கிறது. புதிதாக அலுவலகம் கட்டி வருவதால் அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள தனியார் பில்டிங்கில் தற்காலிகமாக அவிநாசி பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் அவிநாசி பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்று வரும் சூழ்நிலையில், பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்திர பதிவு கால தாமதம் ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்டத்திலேயே அவினாசியில்தான் மிக அதிக அளவில் பத்திரபதிவு நடக்கிறது. இங்கு இரண்டு சார்பதிவாளர் இருந்தும் இருவரும் பணிக்கு வர வேண்டிய நிலையில் சில நாட்கள் ஒருவர் மட்டுமே வருகிறார்கள். அலுவலர்களும் அடிக்கடி விடுப்பு எடுப்பதாலும் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதை சாதமாக பயணித்துக் கொண்டு பயன்படுத்திக்கொண்ட பத்திர எழுத்தர்கள், புரோக்கர்கள் அளவுக்கு அதிகமாக பணத்தை பொதுமக்களிடம் இருந்து வாங்கி பத்திரபதிவு அலுவலகத்தில் சில தொகையும் லஞ்சமாக கொடுத்துவிட்டு உடனடியாக பத்திர பதிவு செய்து கொடுக்கிறார்கள் . நேரடியாக வரும் பொதுமக்களிடம் எந்தவித மரியாதையும் கிடையாது, உடனடியாக வேலையும் நடக்காது. பத்திர பதிவு அலுவலகத்தில் டோக்கன் பதிவு முறை வரிசைப்படி பதிவு என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் புரோக்கர்கள் கொடுக்கும் பத்திரங்கள் உடனடியாக பதிவேற்றம் நடக்கும். ஆனால் பொதுமக்கள் நேரடியாக கொடுக்கும் பத்திரங்கள் பல்வேறு பிழைகள் சுட்டிக்காட்டி பலமுறை திருப்பி அனுப்பப்படும். இதனால் வேறு வழி இன்றி இது போன்ற பத்திர எழுத்தர்கள் மற்றும் புரோக்கர்கள் மூலமாக மட்டுமே பத்திரபதிவு அலுவலர்களை நாட வேண்டிய அவலங்கள் இருப்பதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள்.