சத்தியமங்கலம் அருகே குடி போதையில் சிசிடிவி கேமராவை உடைத்த மர்ம நபர் -பொது மக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கே. என். பாளையத்தில்  குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொது மக்களின் நலனுக்காக பொது மக்கள் 1லட்சம் செலவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர். நேற்று இரவு குடி போதையில் மர்ம நபர் ஒருவர் சிசிடிவி கேமராவை கல்லால் உடைத்தார்.இந்த காட்சிகள் மற்றொரு கேமராவில் பதிவாகி உள்ளது.இதனை தடுக்க சென்ற நபரையும் திருப்பி தாக்கி உள்ளார்.இதனால் அந்த பகுதி பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.போலீசார் கேமரா வை உடைத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.