திருப்பூரில் மூன்று நாள் மதுக்கடை விடுமுறை வாக்காளர்கள் சிந்திப்பதற்கா? இல்ல கள்ள சந்தையில் மது விற்பதற்கா?

திருப்பூரில் மூன்று நாள் மதுக்கடை விடுமுறை வாக்காளர்கள் சிந்திப்பதற்கா? இல்ல கள்ள சந்தையில் மது விற்பதற்கா? திருப்பூர் மாவட்டம் புதிய பேருந்து நிலைத்திருந்து கொங்கு மெயின் ரோடு சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடை என் 2344 அருகில் கள்ள சந்தையில் மது விற்பனை படுஜோர் தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் சிந்தித்து வாக்கு அளிப்பதற்காக 17, 18, 19 ஆகிய தேதியில் மூன்று தினங்களும் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து வகை மதுபான கடைகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகள் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ள காரணத்தினால் திருப்பூரில் கள்ளச் சந்தையில் மது விற்க போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மது கடைகளில் உள்ள மொத்த மதுபானங்களையும் வாங்கி குவித்து வைத்துள்ள கள்ளச் சந்தை வியாபாரிகள். எவன் வந்தாலும் கவலை இல்லை, எல்லா போலீசுக்கும் "'மாமூல்" தான் முக்கியம் .காச தூக்கி எறிஞ்சுகிட்டு போய்கிட்டே இருப்போம். இப்ப வியாபாரம் பாத்தா தான் நாலு காசு பார்க்க முடியும் .பாட்டிலுக்கு 100 ரூபாய் ,200 ரூபாய் அதிகம் வச்சாலும் குடிகார பயலுக வாங்கி குடிச்சிட்டு போயிட்டே இருப்பாங்க. ஏதாவது புகார் வந்தால் பெயருக்கு ஒன்னு ரெண்டு கேஸ் கொடுத்தா போதும் என தைரியமாக கள்ளச் சந்தை மதுபான விற்பனையாளர்கள் கூறுகிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டு இந்தியாவை ஆளும் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிப்பதற்காகவே மூன்று நாள் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மூன்று நாளும் கள்ளச் சந்தையில் அதிக விலையில் மது வாங்கி குடித்துவிட்டு போதையில் பொதுமக்கள் வாக்களிக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நடவடிக்கை எடுப்பாரா? சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்