திருப்பூர் பெருமாநல்லூரில் 10 ரூபாய் அதிகம் தராததால் மது கொடுக்க மறுத்த ஊழியர் வைரலாகும் வீடியோ

திருப்பூர் பெருமாநல்லூரில் 10 ரூபாய் அதிகம் தராததால் மது கொடுக்க மறுத்த ஊழியர் வைரலாகும் வீடியோ திருப்பூர் பெருமாநல்லூரில் வாரச் சந்தைக்கு எதிரே உள்ள 1948 அரசு மதுபான கடையில் தொழிலாளி ஒருவர் குவாட்டர் மதுபானம் கேட்கிறார் . தன்னிடம் குவாட்டர் மதுபானத்திற்கு சரியான தொகை ரூ.140 மட்டுமே உள்ளது. அதிகப்படியான தரவேண்டிய 10 ரூபாய் குறைவாக உள்ளது. மறுமுறை வரும் பொழுது தருவதாக கெஞ்சி கூத்தாடி பார்க்கிறார் அப்பாவி குடிமகன். ஆனால் சிறிதும் மனம் இறங்காத அரசு மதுபான கடை ஊழியர் அதிகப்படியான ரூபாய் 10 தந்தால் மட்டுமே மதுபானம் தருவேன். இல்லையென்றால் இடத்தை காலி செய் என்று அசால்டாக பதில் சொல்லும், வீடியோ , மக்கள் மத்தியில் வைரலாக பரவுகிறது.ரூ. 10 இல்லை என்று பரிதாபமாக கேட்கும் தொழிலாளிக்கு சிறிதும் மனம் இறங்காமல் 10 ரூபாய் அதிகம் இருந்தால் மட்டுமே குவாட்டர், இல்லை என்றால் கிளம்பு என்று கூறும் அரசு மதுபான கடை ஊழியரின் கல்நெஞ்சம். குடிமகனின் பரிதாப நிலை ஒரு பக்கம் இருந்தாலும் டாஸ்மார்க் ஊழியர்கள் குவாட்டர்க்கு 10 ரூபாய் , ஆப்புக்கு 20 ரூபாய், புல்லுக்கு 40 என யாராக இருந்தாலும் தரவேண்டும் என்று எழுதப்பட விதியாக தைரியமாக வசூல் செய்து வருகிறார்கள். அரசு மதுபான டாஸ்மாக் ஊழியர்கள் இதை தட்டி கேட்பது யார் ? இதை தடை செய்வது எப்படி ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினார்கள்? எது எப்படியோ அதிகப்படியான 10 ரூபாய் இருந்தால் சரக்கு, இல்லை என்றால் கெட் அவுட்தான் . அரசு ஒருபுறம் மதுபானத்தில் விலை எவ்வளவு அதிகம் ஏத்தினாலும் . அதிலிருந்து 10 ரூபாய் அதிகம் வசூல் செய்யும் அரசு மதுபான கடை ஊழியர்கள் காட்டில் பணமழைதான்.