தேனி மாவட்டம் வீரபாண்டி தனியார் திருமண மண்டபத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேனி மாவட்டம் வீரபாண்டி தனியார் திருமண மண்டபத்தில் சிவசேனா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் பாலாஜி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் இருவர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி அமைப்பாளர் தன்விக் அர்ஜுன் , மாநில பிரச்சார பிரிவு செயலாளர் சரவணன் ,தேனி மண்டல தலைவர் கருப்பையா ,தேனி மாவட்டத் தலைவர் முருகவேல், தேனி மாவட்ட செயலாளர் கார்த்தி, தேனி இளைஞரணி மாவட்ட தலைவர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.