மக்களுடன் முதல்வர் முகாமில் சிக்கதசம்பாளையம் ஊராட்சி ராஜ் நகர் பகுதி பொதுமக்கள்மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம், ஓடந்துறை ஊராட்சி, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, தேக்கம்பட்டி ஊராட்சி மற்றும் நெல்லித்துறை ஊராட்சி இணைந்து நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாம் நஞ்சையலிங்கம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, முகாமிற்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும்அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்துபொதுமக்களுக்கு பயன்படும் துறைகளுக்கு அழைப்பு வழங்கப்பட்டது இந்நிலையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாததினால் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வயதான முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், மக்கள் கூட்ட நெரிசலில் அலைமோதினார்கள், பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு அதிகாரிகள் இல்லாததால் சரியான சேவை வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டனர், மேலும் அதிகமான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது மண்டபத்திற்குள் அவசர கால மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தது இம்முகாமில் பணி செய்யும் அலுவலர்கள் காலுக்கு தரையில் மின் ஒயர்கள் இருந்தது இதனால் அலுவலர்கள் அச்சத்துடன் பணி செய்ததைக் காண முடிந்தது மேலும் அதிகமாக பொதுமக்கள் கூடும் முகாமில்பொதுமக்களுக்கு குடிநீர் ஏற்பாடு செய்யவில்லை பல்வேறு துற தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை, மதுவிலக்கு துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள்முகாமில் வராதது பொதுமக்களுக்கு ஏமாற்றம் அளித்தது நெடுந்தொலைவில் இருந்து பேருந்துகளில் வரும் பொது மக்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இல்லாததா ஏமாற்றத்துடன் அங்கும் இங்கும் அலைந்தனர் வருகிற நாட்களில் நடைபெறும் முகாம்களில் சரியான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு முன்கூட்டியே அழைப்பு வழங்கப்பட வேண்டும் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் முதியவர்களுக்கு என்று இம்முகாமில் எந்தவித அடிப்படைவசதிகளை ஏற்படுத்தவில்லை இருசக்கர நாற்காலி முகாமில் இல்லை இது போன்று முகாமிற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளும் மக்களுக்கு விளக்கம் அளிக்கும் அதிகாரிகளும் இல்லாமல் நடைபெற்றஇம்மு முகம் எந்தவித பலனும் அளிக்க போவதில்லை என்று மக்களின் தரப்பில் கருத்து கூறப்பட்டு வருகிறது எனவே சம்பந்தப்பட்ட முகாம் ஏற்பாடு செய்யும் அதிகாரிகள் வருகிற நாட்களில் சரியான முறையில் முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.