தேனியில் நாடார் சரசுவதி கல்வி நிறுவனங்கள் கல்வித்திருவிழா!!!

கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் தமிழக முழுவதும் 130 கல்லூரிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கு பெற்று தங்களது பேச்சுத் திறமைகளை வெளிப்படுத்தினர். தேனி நாடார் சரசுவதி கல்லூரியில் வருகிற ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான பேச்சுப்போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், கரூர், கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 130க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 130 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பிரம்மாண்ட பேச்சுப்போட்டியில் பங்கேற்று தங்கள் பேச்சுத் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 25 ஆயிரம் இரண்டாமிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு 15,000 மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு பத்தாயிரம் பரிசு தொகையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.