சத்தியமங்கலத்தில் கெம்பே கவுடர் ஜெயந்தி விழா நடைபெற்றது

தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் சார்பில் சத்தியமங்கலம் பழைய பஸ்ஸ்டாணட் பகுதியில் மாவட்ட தலைவர் குப்புராஜ் தலைமையில் கெம்பேகவுடரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர்துாவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து கோம்புபள்ளத்தில் சங்க கொடியை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தலைவர் வெள்ளியங்கிரி ஏற்றி வைத்தார்.பின்பு தனியார் மீட்டிங் ஹாலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வரும் ஆக.,11ம்தேதி பண்ணாரியில் 9மாவட்டத்திலிருந்து சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் குடும்ப விழா,பொதுக்குழு,முப்பெரும் விழா நிகழ்ச்சி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் சத்தியமங்கலம்,பவானிசாகர்,புளியம்பட்டி,டி.என்.பாளையம்,சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நிர்வாகிகள்,பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.