நீலகிரி தாவரவியல் பூங்கா அருகே உடன் கழிப்பிட வசதி வேண்டும்! சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர். ஆனால் சுற்றுலாப் பயணிகளின் அத்தியாவசிய தேவையான கழிப்பிட வசதியின்றி உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் கஷ்டப்பட்டு வருகின்றனர். பல மாதங்களாகவே கழிப்பிட வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . அங்கிருக்கும் கட்டண கழிப்பிடத்தை விரைவாக திறக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை மற்றும் நிர்வாகங்களுக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கால் அடிப்படையில் கழிப்பிட வசதி கிடைக்குமா?