சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு!

அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற பார் கவுன்சில் கருத்தரங்க வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் பி. பாலசுப்பிரியன் தலைமை உரையாற்றினார். துவக்க உரையை சிகரம் செந்தில்நாதன் ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒரிசா மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ். முரளீதர் நீதித்துறையின் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்யும் நீதித்துறை பொறுப்பு! என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார். கருத்தரங்கில் சங்கத்தின் செயல் தலைவர் ஏ. கோதண்டன் பொதுச் செயலாளர் எஸ். சிவகுமார் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.