திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில் கோடை தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் எம்.எல்.ஏ செல்வராஜ் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில் கோடை தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் எம்.எல்.ஏ செல்வராஜ் திறந்து வைத்தார் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில் திருப்பூர் வாவிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மோர் பந்தலை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் . திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார் . விழாவிற்கு திருப்பூர் மாவட்ட திருநங்கைகள் தலைவி திவ்யா தலைமை தாங்கினார். இது குறித்த திருநங்கை திவ்யா கூறியதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் படி பல்வேறு சிறு தொழில் செய்து வருகிறார்கள் மேலும் பல்வேறு சமூக நலப் பணிகளும் செய்து வருகிறார்கள் அதில் ஒரு கட்டமாக தமிழகம் முழுவதும் கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்துள்ளது இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகிறார்கள் , அவர்களின் சிரமத்தை குறைக்க கோடை வெப்பம் தணியும் வரை திருப்பூர் வாலிபாளையத்தில் நீர் மோர் பந்தல் செயல்படும் என்று கூறினார்.