பாரதிய ஜனதா கட்சி சார்பில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்வியல் என்ற தலைப்பில் சிறப்பு முகாம் சென்னை தியாகராய நகர் ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு பிரிவு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கார்த்திகேயன் ஜெயபாலன்,செந்தில்குமார்,கனகராஜ்மதுரை மாவட்டத்திலிருந்து மதுரை மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் சிவ மதன், உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் எம் குணசேகர் நன்றி உரையாற்றினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாநில தலைவர் கோபிநாத் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.