மக்கள் குறைகளை கேட்ட கவுன்சிலர் அதை நிறைவேற்றுவாரா? ஸ்ரீராம் பகுதி மக்கள் எதிர்பார்ப்பு!

கோவை மாவட்டம் போத்தனூர் ஸ்ரீராம் நகரில் மக்களின் குறைகளை கேட்பதற்காக 99 ஆவது வார்டு கவுன்சிலர் அஸ்லாம் பாஷா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் அனைவரும் அப்பகுதியில் இருக்கும் குறைகளை கூறினர். மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நள்ளிரவுக்கு மேல் வருவதினால் அதை பயன்படுத்த முடியாமல் தவிப்பதாகவும், குப்பைகள் காலி மனை பகுதியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதாகவும், சில பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் குடிநீரில் கலப்பதாகவும், மின்விளக்குகளில் எறியும் வெளிச்சத்தை மரங்கள் மறைப்பதால் தெருக்கள் இருளாக இருப்பதாகவும், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், தெருக்களில் பல பகுதிகளில் புதர்கள் காணப்படுவதினால் பாம்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதற்கான சகல வழிகளும் உள்ளது என்று மக்கள் கூறிய குறைகளை ஒன்றொன்றாக விசாரித்த 99 ஆவது வார்டு கவுன்சிலர் அசலாம் பாஷா குறைகளை சீரமைத்து தருவதாக உறுதியளித்தார். மாநகராட்சி ஆணையர் மக்களின் குறைகளை கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பது போல் 99 வார்டு கவுன்சிலரும் நடவடிக்கை எடுக்க முன் வருவதை மக்கள் வரவேற்றனர். கழிவு நீர் குழாய்களில் நெகிழிகளை போடுவதால் அடைப்பு ஏற்படுவதால் மக்களும் இதை கவனத்தில் கொண்டு நெகிழிகளை முறையாக தரம் பிரித்து போட வேண்டும் என்பதையும் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது. காலி மனை பகுதியை மாநகராட்சி வெளியிட்டு குப்பைகளை கொட்டாதபடி பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இடத்தின் உரிமையாளர்கள் வேலிக்கான செலவுகளை மட்டும் மாநகராட்சிக்கு செலுத்திவிட செய்ய வேண்டும், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும் என்றும் மக்கள் எந்த நேரம் ஆனாலும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை கூறலாம் என்று பணிவாக கேட்டுக்கொண்டார். சிறு வயதாக இருந்தாலும் பணிவாகவும் கவனமாகவும் மக்கள் குறைகளை கேட்ட 99 ஆவது வார்டு கவுன்சிலர் அஸ்லாம் பாஷாவுக்கு அப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்தனர்.